ஆபகூக் 2:5-7 - WCV
5
மேலும் செல்வம் ஏமாற்றிவிடும்: ஆணவக்காரர் நிலைத்து நிற்கமாட்டார்: அவர்களது பேராசை பாதாளத்தைப் போல் பரந்து விரிந்தது: சாவைப்போல் அவர்களும் போதும் என்று நிறைவு அடைவதில்லை: வேற்றினத்தார் யாவரையும் அவர்கள் தங்கள் பக்கம் சேர்த்துக் கொள்கின்றனர்: மக்களினங்கள் அனைத்தையும் தங்கள் உடைமை ஆக்கிக் கொள்கின்றனர்.
6
ஆனால் தோல்வியுற்ற அனைவரும் அவர்கள் மேல் பழிமொழிகளையும், ஏளனப் பாடல்களையும் இப்படிப் புனைவார்கள்: “தமக்குரியது அல்லாததைக் தமக்கெனக் குவித்துக் கொள்கின்றவருக்கு ஐயோ கேடு! இன்னும் எத்துணைக் காலத்திற்கு இப்படிச் செய்வர்? அவர்கள் தங்கள்மேல் அடைமானங்களையே சுமத்திக் கொள்கின்றார்கள்!”
7
உமக்குக் கடன் கொடுத்தவர்கள் திடீரென எதிர்த்தெழ மாட்டார்களோ? உன்னைத் திகிலடையச் செய்கின்றவர்கள் விழித்தெழ மாட்டார்களோ? அப்பொழுது நீ அவர்களுக்குக் கொள்ளைப் பொருள் ஆவாய்.