12
ஆண்டவரே, என் கடவுளே, என் தூயவரே தொன்று தொட்டே இருப்பவர் நீர் அல்லவா? நீர் சாவைக் காண்பதில்லை: ஆண்டவரே, அவர்களை எங்கள் தண்டனைத் தீர்ப்பாய் ஏற்படுத்தியவர் நீரே: புகலிடமே, எங்களைச் சாடும் சாட்டையாய் அவர்களை ஆக்கியவரும் நீரே.
13
தீமையைக் காண நாணும் தூய கண்களை உடையவரே, கொடுமையைப்”பார்க்கத் தாங்காதவரே, கயவர்களை நீர் ஏன் பார்த்துக் கொண்டே இருக்கிறீர்? பொல்லாதவர் தம்மைவிட நேர்மையாளரை விழுங்கும்போது நீர் ஏன் மௌனமாய் இருக்கின்றீர்?
14
நீர் மானிடரைக் கடல் மீன்கள் போலும் தலைமை இல்லா ஊர்வனபோலும் நடத்துகின்றீர்.