நாகூம் 3:8-10 - WCV
8
நைல் நதியின் கரையருகில் நீரால் சூழப்பட்ட, கடலை அரணாகவும் தண்ணீரை மதிலாகவும் கொண்ட தீப்சு நகரைவிட நீ சிறப்புற்று இருந்தாயோ?
9
எத்தியோப்பியாவும் எகிப்தும் அந்த நகருக்கு வலிமையாய் இருந்தன: அதன் வலிமைக்கோ எல்லை இல்லை: பூத்தும் லிபியாவும் அதற்குத் துணையாய் இருந்தன.
10
இருந்தும், அதன் மக்கள் சிறைப் பிடிக்கப்பட்டு அடிமைகளாய் நாடு கடத்தப்பட்டனர்: அதன் குழந்தைகள் தெருக்கள் தோறும் மோதியடிக்கப்பட்டனர்: அதன் உயர்குடி மக்கள் மேல் சீட்டுப் போடப்பட்டது: அதன் பெரிய மனிதர் அனைவரும் சங்கிலிகளால் இறுகக் கட்டப்பட்டனர்.