12
உன் அரண்கள் யாவும் முதலில் பழுத்த கனிகள் நிறைந்த அத்தி மரங்களுக்கு ஒப்பானவை: அத்தி மரங்களைப் பிடித்து உலுக்கும்போது பழங்கள் தின்பதற்கு வாயில் விழும்.
13
உன் போர்வீரர்கள் உன் பெண்களைப் போன்றவர்களே! உன் நாட்டு வாயில்கள் பகைவர்களுக்காகத் திறந்து கிடக்கின்றன: உன் தாழ்ப்பாள்கள் நெருப்புக்கு இரையாயின.
14
முற்றுகை நாள்களுக்காகத் தண்ணீர் சேமித்து வை: உன்னுடைய அரண்களை வலிமைப்படுத்து: களிமண்ணைப் பிசைந்து சேறாக்கு: செங்கல் அறுக்கச் சட்டங்களை எடு.
15
ஆயினும் நெருப்பு உன்னை விழுங்கும்: வாளால் நீ வெட்டுண்டு மடிவாய்: வெட்டுக்கிளிபோல் அது உன்னை விழுங்கிவிடும்: வெட்டுக்கிளிபோல் நீங்கள் பலுகுங்கள்: பச்சைக்கிளிபோல் நீங்கள் பெருகுங்கள்.