மீகா 5:10-14 - WCV
10
அந்நாளில், “நான் உன்னிடமுள்ள உன் குதிரைகளை வெட்டி வீழ்த்துவேன்: உன் தேர்ப்படையை அழித்தொழிப்பேன்” என்கிறார் ஆண்டவர்.
11
“உன் நாட்டிலுள்ள நகர்களைத் தகர்த்தெறிவேன்: உன் அரண்கள் அனைத்தையும் தரைமட்டமாக்குவேன்.
12
உன்னுடைய மாயவித்தைக்காரர்களை ஒழித்துக்கட்டுவேன்: குறிசொல்லுவோர் உன்னிடம் இல்லாதொழிவர்.
13
நீ செய்து வைத்திருக்கும் சிலைகளையும் படிமங்களையும் உடைத்தெறிவேன்: உன் கைவினைப் பொருள்கள்முன் இனி நீ தலைவணங்கி நிற்கமாட்டாய்.
14
நீ நிறுத்தியிருக்கும் கம்பங்களைப் பிடுங்கி எறிவேன்: உன் நகரங்களை அழித்தொழிப்பேன்.