2
வேற்றினத்தார் பலர் அங்கு வந்து சேர்ந்து, “புறப்படுங்கள், ஆண்டவரின் மலைக்குச் செல்வோம்: யாக்கோபின் கடவுளது கோவிலுக்குப் போவோம்: அவர் தம் வழிகளை நமக்குக் கற்பிப்பார்: நாமும் அவர் நெறிகளில் நடப்போம்” என்பார்கள்: ஏனெனில் சீயோனிலிருந்து திருச்சட்டம் வெளிப்படும்: எருசலேமிலிருந்து ஆண்டவரின் வாக்கு புறப்படும்.
3
அவரே பல மக்களினங்களுக்கு இடையே உள்ள வழக்குகளைத் தீர்த்துவைப்பார்: தொலைநாடுகளிலும் வலிமைமிக்க வேற்றினத்தார்க்கு நீதி வழங்குவார்: அவர்களோ தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார்கள்: ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது: அவர்கள் இனி ஒருபோதும் போர்ப்பயிற்சி பெறமாட்டார்கள்.
4
அவர்களுள் ஒவ்வொருவரும் தம் திராட்சைத் தோட்டத்தின் நடுவிலும், அத்தி மரத்தின் அடியிலும் அமர்ந்திருப்பர்: அவர்களை அச்சுறுத்துவார் எவருமில்லை: ஏனெனில், படைகளின் ஆண்டவரது திருவாய் இதை மொழிந்தது.