5
இறைவாக்கினர்களைக் குறித்து ஆண்டவர் கூறுவது இதுவே: “அவர்கள் என் மக்களைத் தவறான வழியில் நடத்திச் செல்கின்றார்கள். வயிறார உண்ணக் கொடுத்தவரிடம் 'அமைதி உண்டாகுக!' என உரக்கச் செல்கின்றார்கள்: வாய்க்குத் தீனி போடாதவரிடம் 'புனிதப் போர் வரும்' எனக் கூறுகின்றார்கள்.”
6
ஆதலால் “இறைவாக்கினரே, திருக்காட்சி உங்களுக்குக் கிடைக்காது: முன்னுரைத்தல் இராது: காரிருள் உங்களைக் கவ்விக் கொள்ளும்: இனி உங்கள்மேல் கதிரவன் ஒளி படராது: பகலும் உங்களுக்கு இருளாய் இருக்கும்.”
7
காட்சி காண்பவர்கள் மானக்கேடு அடைவார்கள்: முன்னுரைப்பவர்கள் நாணிப்போவார்கள்: அவர்கள் அனைவரும் தங்கள் வாயைப் பொத்திக் கொள்வார்கள்: ஏனெனில் கடவுளிடமிருந்து மறுமொழி ஏதும் வராது.