மீகா 2:1-3 - WCV
1
தங்கள் படுக்கைகளின்மேல் சாய்ந்து தீச்செயல் புரியத் திட்டமிட்டுக் கொடுமை செய்ய முயல்பவர்களுக்கு ஐயோ கேடு! பொழுது புலர்ந்தவுடன் தங்கள் கைவலிமையினால் அவர்கள் அதைச்செய்து முடிக்கின்றார்கள்.
2
வயல் வெளிகள்மீது ஆசை கொண்டு, அவற்றைப் பறித்துக் கொள்கின்றார்கள்: வீடுகள்மேல் இச்சை கொண்டு அவற்றைக் கைப்பற்றிக் கொள்கின்றார்கள்: ஆண்களை ஒடுக்கி, அவர்கள் வீட்டையும் உரிமைச் சொத்தையும் பறிமுதல் செய்கின்றார்கள்.
3
ஆதலால் ஆண்டவர் கூறுவது இதுவே: “இந்த இனத்தாருக்கு எதிராகத் தீமை செய்யத் திட்டமிடுகிறேன்: அதனினின்று உங்கள் தலையை விடுவிக்க உங்களால் இயலாது: நீங்கள் ஆணவம் கொண்டு நடக்கமாட்டீர்கள்: ஏனெனில் காலம் தீயதாய் இருக்கும்.