7
ஆகையால் அவர்கள்தான் முதலில் நாடு கடத்தப்படுவார்கள்: அவர்களது இன்பக் களிப்பும் இல்லாதொழியும்.
8
தலைவராகிய ஆண்டவர் தம்மீது ஆணையிட்டுக் கூறுகிறார்: படைகளின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு சொல்கிறார்: யாக்கோபின் செருக்கை நான் வெறுக்கிறேன்: அவனுடைய கோட்டைகளை அருவருக்கிறேன். நகரையும் அதிலுள்ள யாவரையும் நான் கைவிட்டு விடுவேன்.
9
ஒரு வீட்டில் பத்துப்பேரே இருந்தாலும் அவர்களும் மாண்டு போவார்கள்.
10
வீட்டிலிருந்து எலும்புகளை எடுத்துச் செல்ல மிகச் சிலரே தப்பிப் பிழைப்பார்கள்: ஒருவன், வீட்டில் மூலையிலிருக்கும் இன்னொருவனிடம், “உன்னுடன் வேறு யாரேனும உளரோ?” என்று கேட்க, அவன், “இல்லை” என்று பதில் சொல்லி “பேசாதே, ஆண்டவரின் பெயரைச் சொல்லக் கூடாது” என்பான்.
11
ஆண்டவர்தாமே ஆணையிடுகின்றார்: பெரிய மாளிகைகளைத் தரைமட்டமாக்குவார்: சிறிய வீடுகளைத் தவிடுபொடியாக்குவார்.