ஆமோஸ் 5:21-24 - WCV
21
“உங்கள் திருவிழாக்களை நான் வெறுத்து அருவருக்கின்றேன்: உங்கள் வழிபாட்டுக் கூட்டங்களில் எனக்கு விருப்பமே இல்லை.
22
எரிபலிகளையும் தானியப் படையல்களையும் எனக்கு நீங்கள் செலுத்தினாலும் நான் ஏற்க மாட்டேன்: கொழுத்த விலங்குகளை நல்லுறவுப் பலிகளாகச் செலுத்தும்போது நான் ஏறெடுத்தும் பார்க்கமாட்டேன்.
23
என் முன்னிலையில் நீங்க்ள இரைச்சலிட்டுப் பாடும் பாடல்களை நிறுத்துங்கள், உங்கள் வீணைகளின் ஓசையை நான் கேட்க மாட்டேன்.
24
மாறாக, நீதி வெள்ளமெனப் பொங்கி வருக! நேர்மை வற்றாத ஆறாகப் பாய்ந்து வருக!