16
ஆகையால், படைகளின் கடவுளும் தலைவருமாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: “பொதுவிடங்கள் எங்கும் அழுகுரல் கேட்கும், எல்லா வீதிகளிலும், “ஐயோ! ஐயோ!” என்ற புலம்பல் எழும்பும்: வயலில் வேலை செய்வாரை அழுவதற்குக் கூப்பிடுவர்: ஒப்பாரி பாடத் தெரிந்தவர்களை ஓலமிட்டுப் புலம்ப அழைப்பர்.
17
திராட்சைத் தோட்டம் எங்கணும் ஒரே அழுகையாய் இருக்கும்: ஏனெனில், உங்கள் நடுவே நான் கடந்து செல்வென்”, என்கிறார் ஆண்டவர்.
18
ஆண்டவரின் நாளைப் பார்க்க விரும்புவோரே, உங்களுக்கு ஐயோ கேடு! ஆண்டவரின் நாளுக்காக நீங்கள் ஏங்குவது ஏன்? அது ஒளிமிக்க நாளன்று: இருள் சூழந்த நாளாகத் தான் இருக்கும்.