ஆமோஸ் 3:9-15 - WCV
9
“அசீரியாவின் கோட்டைகள் மேலும் எகிப்து நாட்டின் கோட்டைகள் மேலும் நின்றுகொண்டு இவ்வாறு பறைசாற்று: சமாரியாவின் மலைகள்மேல் வந்து கூடுங்கள்: அங்கு ஏற்படும் குழப்பங்களையும் நடக்கும் கொடுமைகளையும் பாருங்கள்.
10
நலமானதைச் செய்ய அவர்களுக்குத் தெரியவதில்லை” என்கிறார் ஆண்டவர். “அவர்கள் தங்கள் கோட்டைகளை வன்முறைகளாலும் கொள்ளைகளாலும் நிரப்புகிறார்கள்.”
11
ஆகையால், தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: “பகைவன் ஒருவன் வந்து நாட்டைச் சூழந்து கொள்வான்: அரண்களையெல்லாம் தரைமட்டமாக்குவான்: உங்கள் கோட்டைகள் கொள்ளையிடப்படும்.
12
ஆண்டவர் கூறுவது இதுவே: “சிங்கத்தின் வாயிலிருந்து இடையன் தன் ஆட்டின் இரண்டு கால்களையோ காதின் ஒருபகுதியையோ பிடுங்கி எடுப்பது போல, சமாரியாவில் குடியிருந்து, பஞ்சணைகள்மீதும் மெத்தைகள்மீதும் சாய்ந்து இன்புறும் இஸ்ரயேல் மக்கள் விடுவிக்கப்படுவதும் இருக்கும்.”
13
“கேளுங்கள்: யாக்கோபின் வீட்டாருக்கு எதிராகச் சான்று பகருங்கள்,” என்கிறார் தலைவரும் படைகளின் கடவுளுமாகிய ஆண்டவர்.
14
“இஸ்ரயேலை அதன் குற்றங்களுக்காகத் தண்டிக்கும் நாளில், பெத்தேலில் உள்ள பலிபீடங்களை அழிப்பேன்: பலிபீடத்தின் கொம்புகள் வெட்டப்பட்டுத் தரையில் விழும்.
15
குளிர்கால வேனிற்கால மாளிகைகளை இடித்துத் தள்ளுவேன்: தந்தத்தாலான வீடுகள் அழிந்து போகும்: மாபெரும் இல்லங்களும் பாழாய்ப் போகும்,” என்கிறார் ஆண்டவர்.