1
ஆண்டவர் கூறுவது இதுவே: “மோவாபு எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை மாற்றவே மாட்டேன்: ஏனெனில், அவன் ஏதோம் அரசனின் எலும்புகளைச் சுட்டுச் சாம்பலாக்கினான்.
2
ஆதலால், மோவாபின்மேல் நெருப்பைக் கொட்டுவேன். அது கெரியோத்தின் கோட்டைகளை விழுங்கிவிடும்: இரைச்சல், கூச்சல், எக்காள முழக்கம் ஆகியவை ஒருசேர எழும் வேளைகளில் மோவாபு மடிந்திடுவான்.
3
அந்நாட்டின் ஆட்சியாளனை அவர்களிடையேயிருந்து அகற்றிவிடுவேன்: அவனோடு அதிகாரிகள் அனைவரையும் அழித்து விடுவேன்” என்கிறார் ஆண்டவர்.