18
பின்னர், அவர் எரிபலிக்கான ஆட்டுக்கிடாயைக் கொண்டு வந்தார்.அதன் தலைமீது ஆரோனும் அவர் புதல்வரும் கைகளை வைத்தனர்.
19
அது வெட்டப்பட்டது.மோசே அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின் மேல் சுற்றிலும் தெளித்தார்.
20
ஆட்டுக்கிடாய் துண்டிக்கப்பட்டது.மோசே அதன் தலையையும் துண்டங்களையும் கொழுப்பையும் எரித்து,
21
குடல்களையும், தொடைகளையும் தண்ணீரால் கழுவிய பின்னர், ஆட்டுக்கிடாய் முழுவதையும் ஆண்டவர் கட்டளையிட்டபடியே பலிபீடத்தின்மேல் எரிபலியாக எரித்தார்.இது ஆண்டவருக்கு உகந்த நறுமணமிக்க நெருப்புப்பலி.