லேவியராகமம் 26:36-38 - WCV
36
உங்கள் எதிரிகளின் நாட்டில் உங்களுள் எஞ்சியிருப்போரின் உள்ளத்தில் நான் சோர்வை ஏற்படுத்துவேன்.காற்றில் பறக்கும் இலையின் ஓசைகூட அவர்களை அச்சுறுத்தும்.வாளுக்குத் தப்பியோடுவதுபோல ஓடி, யாரும் துரத்தாமலேயே விழுவார்கள்.
37
வாளால் துரத்தப்படுவதுபோல யாரும் துரத்தாமலேயே ஒருவர்மேல் ஒருவர் இடறி விழுவார்கள்.உங்கள் எதிரிகளுக்கு முன் உங்களால் நிற்கவும் இயலாது.
38
வேற்றினத்தாரிடையே அழிந்து போவீர்கள்.உங்கள் எதிரிகளின் நாடு உங்களை விழுங்கும்.