2
“இஸ்ரயேல் மக்களிடம் நீ இவ்வாறு கூறு: நீங்கள் சபையாகக் கூடிப் புனிதமாய்க் கடைப்பிடிக்க வேண்டிய ஆண்டவருக்குரிய பண்டிகை நாள்களாவன:
3
ஆறு நாள்கள் நீங்கள் வேலை செய்யலாம்.ஏழாம் நாளோ முழுமையாக ஓய்வெடுக்கும் நாள்: புனித சபை கூடும் நாள்.அன்று நீங்கள் ஒரு வேலையும் செய்யவேண்டாம்.நீங்கள் வாழும் இடமெங்கும் அது ஆண்டவருக்கான ஓய்வுநாள்.
4
நீங்கள் சபையாகக் கூடிக் குறிப்பிட்ட நாள்களில் புனிதமாய்க் கடைப்பிடிக்க வேண்டிய ஆண்டவரின் பண்டிகை நாள்களாவன: