2
“இஸ்ரயேல் புதல்வரிலோ இஸ்ரயேலில் தங்கும் அன்னியரிலோ யாரேனும் தன் வழிமரபில் ஒரு பிள்ளையை மோலேக்குக்குக் கொடுத்தால், நாட்டு மக்கள் அவனைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும்.
3
அவனை எதிர்த்து நான் என் முகத்தைத் திருப்பிக்கொள்வேன்.எனது தூயகத்தைத் தீட்டுப்படுத்தி, திருப்பெயரை மாசுபடுத்தித் தன் வழிமரபில் ஒரு பிள்ளையை மோலேக்கிற்குக் கொடுத்ததால், அவனை அவன் இனத்தில் இராதபடி அழிப்பேன்.
4
தன்வழிமரபில் ஒரு பிள்ளையை மோலேக்குக்குக் கொடுத்தும், நாட்டு மக்கள் அவனைக் கொலை செய்யாது விட்டுவிட, அவன் தலைமறைவாயிருந்தால்,
5
நான் அவனையும் அவன் குடும்பத்தையும் எதிர்த்து என் முகத்தைத் திருப்பிக் கொள்வேன்.மோலேக்கின் ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்ட அவனையும் அவனைப் பின்பற்றிய யாவரையும் அவர்கள் இனத்தில் இராதபடி அழிப்பேன்.