லேவியராகமம் 18:22-28 - WCV
22
பெண்ணுடன் பாலுறவு கொள்வதுபோல் ஆணோடு கொள்ளாதே! அது அருவருப்பு.
23
எந்த விலங்கோடும் பாலுறவு கொண்டு உன்னைத் தீட்டாக்கிக் கொள்ளாதே! எந்தப் பெண்ணும் விலங்கோடு பாலுறவு கொள்ள வேண்டாம்.அது முறைகேடான அருவருப்பு.
24
இவற்றில் ஒன்றினாலும் உங்களைத் தீட்டாக்கிக் கொள்ள வேண்டாம்.ஏனெனில், நான் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்ட வேற்றினத்தவர்.இவற்றால் தீட்டானதால் நாடே தீட்டாகிவிட்டது.
25
இவ்வாறு நாடு தீட்டுப்பட்டதால் நான் அதன் குற்றங்களுக்காகத் தண்டனை வழங்கினேன்.நாடும் அவர்களை வெளியே கக்கியது.
26
நீங்கள் என் கட்டளைகளையும் நியமனங்களையும் கடைப்பிடியுங்கள்.குடிமக்களாயினும் உங்களோடு தங்கும் அன்னியராயினும் இந்த அருவருப்புகளில் ஒன்றையும் செய்ய வேண்டாம்.
27
ஏனெனில் இந்த அருவருப்பானவற்றை உங்கள் முன் அந்த நாடுகளில் இருந்தவர்கள் செய்ததனால் நாடு தீட்டாயிற்று.
28
உங்களுக்குமுன் இருந்தோரை நாடு வெளியே கக்கிவிட்டது போல, நீங்கள் தீட்டாக்கினால் கக்கப்படுவீர்கள்.