2
தொழுநோயாளியின் தீட்டகற்றும் நாளில் அவரைக் குறித்த சட்டம்: அவர் குருவிடம் அழைத்து வரப்பட வேண்டும்.குரு பாளையத்திற்கு வெளியே வந்து, அவரைச் சோதித்துப் பார்க்க வேண்டும்.
3
தொழுநோயாளியின் நோய் குணமாயிற்று எனக் குரு கண்டால்,
4
தீட்டு அகற்றப்பட இருப்போரை உயிருள்ள, குறையற்ற இரு குருவிகளையும், ஒரு கேதுரு மரக்கட்டையையும், கருஞ்சிவப்பு நூலையும், ஈசோப்பையும் வாங்கி வருமாறு பணிப்பார்.
5
மண்பாண்டத்தில் ஊற்றிய ஊற்று நீரில் குருவி ஒன்றின் கழுத்தை அறுப்பார்:
6
உயிருள்ள குருவியையும், கேதுரு மரக்கட்டையையும், கருஞ்சிவப்பு நூலையும் ஈசோப்பையும் எடுத்து, இவை அனைத்தையும் உயிருள்ள குருவியையும் ஊற்று நீரில் கழுத்தறுக்கப்பட்ட குருவியின் குருதியில் தோய்ப்பார்:
7
தொழுநோயால் ஏற்பட்ட தீட்டை அகற்றப்படவிருப்போரின் மீது ஏழுமுறை தெளித்து, அவரது தீட்டை அகற்றுமாறு உயிருள்ள குருவியைத் திறந்த வெளியில் விட்டுவிடுவார்.
8
தீட்டு அகற்றப்படுவோர் தம் உடைகளைத் துவைத்து, தம் தலையை மழித்து நீராடியதும் தூய்மையாவார்: பின்பு, பாளையத்திற்குச் சென்று, ஏழு நாள் தம் கூடாரத்துக்கு வெளியே தங்கியிருப்பார்:
9
ஏழாம் நாளில் தம் தலை, தாடி, புருவம், மற்றும் உரோமம் அனைத்தையும் மழுங்கச் சிரைத்துத் தம் உடலை நன்கு கழுவித் தூய்மையாவார்.
10
எட்டாவது நாள், ஒரு வயது நிரம்பிய பழுதற்ற ஓர் ஆட்டையும் இரு கிடாய்க்குட்டிகளையும், இருபதுபடி அளவில் பத்தில் மூன்று பங்கு மாவை எண்ணெயில் பிசைந்து தயாரித்த உணவுப் படையலையும் ஆழாக்கு எண்ணெயையும் கொண்டு வரவேண்டும்.
11
தூய்மைப்படுத்தவிருக்கும் குரு தீட்டு அகற்றப்படவிருக்கும் மனிதரையும், பலிப் பொருள்களையும், சந்திப்புக்கூடார வாயிலுக்குக் கொண்டு வருவார்.
12
பின்னர், குரு ஆழாக்கு எண்ணெயையும் கிடாய்க் குட்டிகளில் ஒன்றையும் குற்றம் நீக்கும் பலியாக ஒப்படைப்பார்.ஆண்டவர் திருமுன் ஆரத்திப்பலியாக அவற்றைச் செலுத்துவார்.
13
பாவம் போக்கும் பலிக்கும் எரிபலிக்கும் உரியவற்றை வெட்டும் தூய இடத்தில் கிடாய்க் குட்டியையும் வெட்டுவார்.இந்தக் குற்றப்பழி நீக்கும் பலி பாவம் போக்கும் பலி போன்று குருவுக்கு உரியது.ஏனெனில், அது மிகவும் தூய்மையானது.
14
குற்றம் நீக்கும் பலியின் குருதியில் குரு சிறிது எடுத்துத் தீட்டு அகற்றப்படவிருப்போரின் வலக்காது மடல், வலக்கைப் பெருவிரல், வலக்கால் பெருவிரல் ஆகியவற்றின் மீது பூசுவார்.
15
பின்பு, குரு அந்த ஆழாக்கு எண்ணெயில் சிறிது தன் இடக்கையில் ஊற்றி,
16
தன் வலக்கை விரலை அதில் தோய்த்து, ஏழு முறை அந்த எண்ணெயைஆண்டவர் திருமுன் தெளிப்பார்.
17
தன் கையில் எஞ்சியிருக்கும் எண்ணெயில் சிறிது எடுத்து, தீட்டு அகற்றப்படவிருப்போரின் வலக்காது மடல், வலக்கைப் பெருவிரல், வலக்கால் பெருவிரல் ஆகியவற்றின் முன்பு பூசிய குற்றப்பழி நீக்கும் பலிக்குருதியின் மீது அவர் பூசுவார்.
18
பின்னர், அவர் தம் கையில் எஞ்சியிருக்கும் எண்ணெயைத் தீட்டு அகற்றப்படவிருப்போரின் தலையில் தடவி அவருக்காக ஆண்டவர் திருமுன் கறை நீக்கம் செய்வார்.
19
பாவம் போக்கும் பலியைச் செலுத்தி, தீட்டகற்றப்பட இருப்போருக்குத் தீட்டு நீங்கக் கறை நீக்கம் செய்வார்.பின்னர் எரிபலிக்குரியதை வெட்டுவார்.
20
எரிபலியையும், உணவுப்படையலையும் பலிபீடத்தில் படைப்பார்.இவ்வாறு குரு கறைநீக்கம் செய்ய அந்த மனிதர் தூய்மையாவார்.
21
இவற்றைச் செலுத்த இயலாத ஏழையாயிருந்தால் அவர் குற்றப்பழி நீக்கத்திற்கான ஆரத்திப் பலியாகவும், குறைநீக்கப் பலியாகவும் ஒரு கிடாய்க் குட்டியையும், உணவுப் பலியாக இருபது படி அளவில் மரக்காலில் பத்தில் ஒரு பங்கு மாவை எண்ணெயில் பிசைந்து தயாரித்த உணவுப்படையலையும் ஆழாக்கு எண்ணெயையும்
22
தம் நிலைமைக்கேற்ப, இரு புறாக்களையோ, புறாக் குஞ்சுகளையோ கொண்டுவர வேண்டும்.ஒன்று பாவம்போக்கும் பலி: மற்றது எரிபலி.
23
அவற்றை அவர் எட்டாம் நாளில் சந்திப்புக்கூடார வாயிலில் ஆண்டவர் திருமுன் தம் தீட்டை அகற்றிக்கொள்வதற்காகக் கொண்டுவர வேண்டும்.
24
குற்றப்பழி நீக்கும் கிடாய்க்குட்டியையும், ஆழாக்கு எண்ணெயையும் குரு வாங்கி, ஆண்டவர் திருமுன் ஆரத்திப்பலியாகக் காட்டுவார்.
25
குற்றப்பழி நீக்கும் கிடாய்க்குட்டியை அடித்து அதன் இரத்தத்தில் சிறிது பிடித்துத் தீட்டு அகற்றப்படவிருப்போர் வலக்காது மடலிலும் வலக்கைப் பெருவிரலிலும் வலக்கால் பெருவிரலிலும் பூசுவார்.
26
பின்னர், அவர் தம் இடக்கையில் சிறிது எண்ணெயை ஊற்றி,
27
தம் வலக்கை விரலை அதில் தோய்த்து, ஏழுமுறை அந்த எண்ணெயை ஆண்டவர் திருமுன் தெளிப்பார்.
28
தம் கையில் எஞ்சியிருக்கும் எண்ணெயில் சிறிது எடுத்து, தீட்டு அகற்றப்பட இருக்கிறவரின் வலக்காது மடல், வலக்கைப் பெருவிரல், வலக்கால் பெருவிரல் ஆகியவற்றில் முன்னர் பூசிய குற்றப்பழி நீக்கும் பலிக்குருதியின் மீது அவர் பூசுவார்.
29
பின்னர் அவர் தம் கையில் எஞ்சியிருக்கும் எண்ணெயைத் தீட்டு அகற்றப்பட விருப்போரின் தலையில் தடவி அவருக்காக ஆண்டவர் திருமுன் கறைநீக்கம் செய்வார்.
30
பின்னர்த் தீட்டு அகற்றப்படவிருப்போர் தம் நிலைமைக்குத் தக்கவாறு கொண்டுவந்த புறா எனினும் புறாக் குஞ்செனினும்,
31
அவற்றில் ஒன்றைப் பாவம் போக்கும் பலியாகவும், மற்றதை எரிபலியாகவும் உணவுப் படையலோடு படைப்பார்.இவ்வாறு குரு தீட்டு அகற்றப்படுவோருக்கு ஆண்டவர் திருமுன் கறைநீக்கம் செய்வார்.
32
தம்மைத் தூய்மையாக்கிக் கொள்ளப் போதுமானவற்றைக் கொண்டுவர இயலாத தொழுநோயாளிக்கு உரிய சட்டம் இதுவே.”