17
நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர் என்றும், நான் என் திருமலையாகிய சீயோனில் குடியிருக்கிறேன் என்றும் அப்பொழுது நீங்கள் அறிவீர்கள்: எருசலேம் தூயதாய் இருக்கும்: அன்னியர் இனிமேல் அதைக் கடந்து செல்லமாட்டார்கள்.
18
“அந்நாளில் மலைகள் இனிய, புது இரசத்தைப் பொழியும்: குன்றுகளிலிருந்து பால் வழிந்தோடும்: யூதாவின் நீரோடைகளிலெல்லாம் தண்ணீர் நிரம்பி வழியும்: ஆண்டவரின் இல்லத்திலிருந்து நீரூற்று ஒன்று கிளம்பும்: அது சித்திமிலுள்ள ஓடைகளில் பாய்ந்தோடும்.
19
எகிப்து பாழ்நிலமாகும்: ஏதோம் பாழடைந்து பாலைநிலம் ஆகும்: ஏனெனில், அவர்கள் யூதாவின் மக்களைக் கொடுமைக்கு உள்ளாக்கினார்கள்: அவர்களின் நாட்டிலேயே குற்றமற்ற இரத்தத்தைச் சிந்தினார்கள்.
20
யூதாவோ என்றென்றும் மக்கள் குடியிருக்கும் இடமாயிருக்கும்: எருசலேமில் எல்லாத் தலைமுறைக்கும் மக்கள் குடியிருப்பார்கள்.
21
சிந்தப்பட்ட இரத்தத்திற்கு நான் பழிவாங்கவே செய்வேன்: குற்றவாளிகளைத் தண்டியாமல் விடேன்: ஆண்டவராகிய நான் சீயோனில் குடியிருப்பேன்.