5
குடிவெறியர்களே, விழித்தெழுந்து அழுங்கள்: திராட்சை இரசம் குடிக்கிறவர்களே, நீங்கள் அனைவரும் அந்த இனிப்பான திராட்சை இரசத்திற்காகப் புலம்புங்கள்: ஏனெனில், அது உங்கள் வாய்க்கு எட்டாமற் போயிற்று.
6
ஆற்றல்மிக்க, எண்ணிக்கையில் அடங்காத வேற்றினம் ஒன்று என் நாட்டிற்கு எதிராய் எழும்பி இருக்கின்றது: அதன் பற்கள் சிங்கத்தின் பற்கள்: பெண் சிங்கத்தின் கடைவாய்ப் பற்கள் அதற்கு உண்டு.
7
என்னுடைய திராட்சைக் கொடிகளை அது பாழாக்கிற்று: அத்தி மரங்களை முறித்துப் போட்டது: அவற்றின் பட்டைகளை முற்றிலும் உரித்துக் கீழே எறிந்தது: அவற்றின் கிளைகள் வெளிறிப் போயின.
8
கணவனாக வரவிருந்தவனை இழந்ததால் சாக்கு உடை உடுத்திக் கொள்ளும் கன்னிப் பெண்ணைப்போல் கதறி அழுங்கள்.
9
ஆண்டவரது இல்லத்தில் தானியப் படையலும் நீர்மப் படையலும் இல்லாமல் ஒழிந்தன. ஆண்டவருக்கு ஊழியம் செய்யும் குருக்கள் புலம்பி அழுகின்றார்கள்.
10
வயல்வெளிகள் பாழாயின: நிலமும் புலம்புகின்றது: ஏனெனில், தானிய விளைச்சல் அழிவுற்றது: இரசம் தரும் திராட்சைக் கொடிகள் காய்ந்துபோயின: எண்ணெய் தரும் ஒலிவ மரங்கள் பட்டுப் போயின:
11
உழவுத் தொழில் செய்வோரே, கலங்கி நில்லுங்கள்: திராட்சைத் தோட்டக்காரர்களே, அழுங்கள். ஏனெனில், கோதுமையும் வாற்கோதுமையும் இல்லாமற் போயின: வயலின் விளைச்சல் அழிந்து போயிற்று.
12
திராட்சைக் கொடி வாடிப் போகின்றது: அத்தி மரம் உலர்ந்துபோகின்றது: மாதுளை, பேரீந்து, பேரிலந்தை போன்ற வயல்வெளி மரங்கள் யாவும் வதங்குகின்றன: மகிழ்ச்சியும் மனிதர்களை விட்டு மறைந்து போகின்றது.