18
காட்டு விலங்கினங்கள் என்னவாய்த் தவிக்கின்றன! மேய்ச்சல் காணா மாட்டு மந்தைகள் திகைத்து நிற்கின்றன: ஆட்டு மந்தைகளும் இன்னலுற்றுத் தவிக்கின்றன!
19
ஆண்டவரே, நான் உம்மை நோக்கிக் கதறுகின்றேன்: பாலைநிலத்தின் மேய்ச்சல் இடங்கள் தீக்கிரையாயின: வயல்வெளியிலிருந்தே மரங்கள் அனைத்தையும் நெருப்பு சுட்டெரித்துவிட்டது.
20
நீரோடைகள் வற்றிப்போனதால் காட்டுவிலங்குகள்கூட உம்மை நோக்கிக் கதறுகின்றன: பாலைநிலத்திலிருந்த மேய்ச்சல் இடங்களை நெருப்பு விழுங்கிவிட்டது.