யோவேல் 1:13-15 - WCV
13
குருக்களே, சாக்கு உடை உடுத்திக்கொண்டு தேம்பி அழுங்கள்: பலிபீடத்தில் பணிபுரிவோரே! அலறிப் புலம்புங்கள்: என் கடவுளின் ஊழியர்களே, சாக்கு உடை அணிந்தவர்களாய் இரவைக் கழியுங்கள்: ஏனெனில், உங்கள் கடவுளின் வீட்டில் தானியப் படையலும் நீர்மப் படையலும் இல்லாமற் போயின.
14
உண்ணா நோன்புக்கென நாள் குறியுங்கள்: வழிபாட்டுப் பேரணியைத் திரட்டுங்கள்: ஊர்ப் பெரியோரையும் நாட்டில் குடியிருப்போர் அனைவரையும் உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் இல்லத்தில் கூடிவரச் செய்யுங்கள்: ஆண்டவரை நோக்கிக் கதறுங்கள்.
15
மிகக் கொடிய நாள் அந்த நாள்! ஆண்டவரின் நாள் அண்மையில் உள்ளது: எல்லாம் வல்லவர் அழிவை அனுப்பும் நாளாக அது வரும்: