யோவேல் 1:10-12 - WCV
10
வயல்வெளிகள் பாழாயின: நிலமும் புலம்புகின்றது: ஏனெனில், தானிய விளைச்சல் அழிவுற்றது: இரசம் தரும் திராட்சைக் கொடிகள் காய்ந்துபோயின: எண்ணெய் தரும் ஒலிவ மரங்கள் பட்டுப் போயின:
11
உழவுத் தொழில் செய்வோரே, கலங்கி நில்லுங்கள்: திராட்சைத் தோட்டக்காரர்களே, அழுங்கள். ஏனெனில், கோதுமையும் வாற்கோதுமையும் இல்லாமற் போயின: வயலின் விளைச்சல் அழிந்து போயிற்று.
12
திராட்சைக் கொடி வாடிப் போகின்றது: அத்தி மரம் உலர்ந்துபோகின்றது: மாதுளை, பேரீந்து, பேரிலந்தை போன்ற வயல்வெளி மரங்கள் யாவும் வதங்குகின்றன: மகிழ்ச்சியும் மனிதர்களை விட்டு மறைந்து போகின்றது.