15
இஸ்ரயேல், நீ வேசித்தனம் புரிந்தாலும், யூதா நாடாகிலும் குற்றமற்றதாய் இருக்கட்டும்: கில்காலுக்குள் நுழையாதீர்கள்: பெத்தாவேனுக்குப் போகாதீர்கள்: “ஆண்டவர்மேல் ஆணை” என்று ஆணையிடாதீர்கள்.
16
கட்டுக்கடங்காத இளம் பசுவைப் போல இஸ்ரயேல் மக்கள் பிடிவாதமாயிருக்கின்றார்கள்: ஆண்டவர் அவர்களைப் பரந்த புல்வெளியில் ஆட்டுக் குட்டியைப் போல் மேய்க்க முடியுமா?
17
எப்ராயிம் சிலைகளோடு சேர்ந்து கொண்டான். அவனை விட்டுவிடு.