ஓசியா 4:12-15 - WCV
12
என் மக்கள் மரக்கட்டையிடம் குறி கேட்கின்றனர்: அவர்களது கோல் மறைமொழிகள் கூறுகின்றது! விபசாரப் புத்தி அவர்களை நெறிதவறச் செய்தது: விபசாரம் செய்வதற்காக அவர்கள் தங்கள் கடவுளைவிட்டு அகன்றனர்.
13
மலையுச்சிகளில் அவர்கள் பலியிடுகின்றார்கள்: குன்றுகள் மேலும், நல்ல நிழல் தரும் கருவாலி, புன்னை, தேவதாரு ஆகிய மரங்களின் கீழும் நறுமணப் புகை எழுப்புகின்றார்கள்: ஆதலால் உங்கள் புதல்வியர் வேசித்தனம் செய்கின்றார்கள்: உங்கள் மருமக்கள் விபசாரம் புரிகின்றார்கள்.
14
உங்கள் புதல்வியர் விபசாரம் செய்தாலும், உங்கள் மருமக்கள் விபசாரம் புரிந்தாலும், நான் அவர்களைத் தண்டிக்கமாட்டேன்: ஏனெனில், ஆண்கள் விலைமாதரோடு போகின்றார்கள்: தேவதாசிகளோடு சேர்ந்து பலி செலுத்துகின்றார்கள்: அறிவற்ற அம்மக்கள் அழிந்து போவார்கள்.
15
இஸ்ரயேல், நீ வேசித்தனம் புரிந்தாலும், யூதா நாடாகிலும் குற்றமற்றதாய் இருக்கட்டும்: கில்காலுக்குள் நுழையாதீர்கள்: பெத்தாவேனுக்குப் போகாதீர்கள்: “ஆண்டவர்மேல் ஆணை” என்று ஆணையிடாதீர்கள்.