ஓசியா 2:10-16 - WCV
10
இப்பொழுதே அவளுடைய காதலர் கண்முன் அவளது வெட்கக் கேட்டை வெளிப்படுத்துவேன்: என்னுடைய கையிலிருந்து அவளை விடுவிப்பவன் எவனுமில்லை.
11
அவளது எல்லாக் கொண்டாட்டத்தையும் விழாக்களையும் அமாவாசைகளையும் ஓய்வு நாளையும் அவளுடைய திருநாள்கள் அனைத்தையுமே ஒழித்துவிடுவேன்.
12
“இவை என் காதலர் எனக்குக் கூலியாகக் கொடுத்தவை” என்று அவள் சொல்லிக் கொண்ட அவளுடைய திராட்சைத் தோட்டங்களையும், அத்தி மரங்களையும் பாழாக்குவேன்: அவற்றைக் காடாக்கிவிடுவேன்: காட்டு விலங்குகளுக்கு அவை இரையாகும்.
13
பாகால்களின் விழாக்களைக் கொண்டாடிய நாள்களில் அவள் அவற்றுக்கு நறுமணப்புகை எழுப்பினாள்: வளையல்களாலும் நகைகளாலும் தன்னை அணி செய்து, தன் காதலர்பின் போய் என்னை மறந்தாள்: இவற்றுக்காக அவளை நான் தண்டிப்பேன்” என்கிறார் ஆண்டவர்.
14
“ஆதலால் நான் அவளை நயமாகக் கவர்ந்திழுப்பேன்: பாலைநிலத்துக்கு அவளைக் கூட்டிப்போவேன்: நெஞ்சுருக அவளுடன் பேசுவேன்.
15
அவளுடைய திராட்சைத் தோட்டங்களை அவளுக்குத் திரும்பக் கொடுப்பேன்: ஆகோர் பள்ளத்தாக்கை நம்பிக்கையின் வாயிலாக மாற்றுவேன்: அப்போது அவள் அங்கே தன் இளமையின் நாள்களிலும், எகிப்து நாட்டினின்று வெளியேறிய காலத்திலும் பாடியதுபோல் பாடுவாள்.
16
அந்நாளில், 'என் கணவன்' என என்னை அவள் அழைப்பாள்: 'என் பாகாலே' என இனிமேல் என்னிடம் சொல்லமாட்டாள்” என்கிறார் ஆண்டவர்.