ஓசியா 10:12-15 - WCV
12
நீதியை நீங்கள் விதைத்துக் கொள்ளுங்கள்: அன்பின் கனியை அறுவடை செய்யுங்கள்: உங்கள் தரிசு நிலத்தை உழுது பண்படுத்துங்கள்: ஏனெனில் ஆண்டவர் வந்து நேர்மையைப் பொழியுமாறு நீங்கள் அவரைத் தேடும் காலம் நெருங்கிவந்துவிட்டது.
13
நீங்கள் கொடுமையை உழுதீர்கள்: தீவினையை அறுவடை செய்தீர்கள்: பொய்ம்மைக் கனியைத் தின்றீர்கள்: உங்கள் தேர்ப்படைகளின் மேலும், வீரர்களின் எண்ணிக்கையின் மேலும் நீங்கள் நம்பிக்கை வைத்தீர்கள்.
14
ஆதலால் உங்கள் மக்களிடையே போர்க் குரல் எழும்பும்: உங்கள் அரண்கள் யாவும் அழிக்கப்படும்: போரின் நாளில் பெத்தர்பேலைச் சல்மான் அழித்தபோது அன்னையர் தம் பிள்ளைகளோடு மோதியடிக்கப்பட்டது போல அது இருக்கும்.
15
பெத்தேலே! உன் கொடிய தீவினைக்காக உனக்கும் இவ்வாறே செய்யப்படும். பொழுது விடியும்போது இஸ்ரயேலின் அரசன் அழிந்து போவது உறுதி.