தானியேல் 8:9-11 - WCV
9
அவற்றுள் ஒன்றிலிருந்து சிறிய கொம்பு ஒன்று முளைத்தெழுந்து, தெற்கு நோக்கியும் கிழக்கு நோக்கியும் அழகுமிக்க நாட்டை நோக்கியும், மிகப் பெரிதாக வளர்ந்து நீண்டது.
10
அது வான் படைகளைத் தொடுமளவு உயர்ந்து வளர்ந்து, விண்மீன் திரள்களுள் சிலவற்றையும் தரையில் வீழ்த்தி மிதித்துவிட்டது.
11
மேலும், அது வான்படைகளின் தலைவரையே எதிர்த்துத் தன்னை உயர்த்திக் கொண்டது. இடையறாது செலுத்தப்பட்ட எரிபலியையும் அவரிடமிருந்து பறித்துக்கொண்டு அவரது தூயகத்தையும் அழித்துப் போட்டது.