“உங்களுக்கு மிகுந்த சமாதானம் உண்டாவதாக! என் ஆட்சிக்குட்பட்ட நாடு முழுவதும் உள்ள மக்கள் தானியேலின் கடவுளுக்கு அஞ்சி நடுங்க வேண்டும். இது என் ஆணை. ஏனெனில், அவரே வாழும் கடவுள்: அவர் என்றென்றும் நிலைத்திருக்கின்றார்: அவரது ஆட்சி என்றும் அழிவற்றது: அவரது அரசுரிமைக்கு முடிவே இராது.