தானியேல் 6:1-3 - WCV
1
மேதியனாகிய தாரியு என்பவன் தன் அறுபத்திரண்டாம் வயதில் அரசை ஏற்றுக்கொண்டான். தன் நாடு முழுவதும் வரி வசூலிப்பதற்கென்று நூற்றிருபது தண்டல்காரரைத் தாரியு நியமித்தான்.
2
இத்தண்டல்காரரைக் கண்காணிப்பதற்கென்று மூன்று மேற்பார்வையாளரை ஏற்படுத்தினான். அரசனுக்கு எவ்வித இழப்பும் நேரிடாவண்ணம் இம் மூவரிடமும் அத்தண்டல்காரர்கள் கணக்குக் கொடுக்கவேண்டும்.
3
இம்மூவருள் தானியேலும் ஒருவர். இவர் மற்ற மேற்பார்வையாளரையும் தண்டல்காரரையும்விடச் சிறந்து விளங்கினார்: ஏனெனில், வியத்தகு ஆவி அவரிடத்தில் இருந்தது. தன் அரசின் முழுப் பொறுப்பையும் அவரிடம் ஒப்படைக்கலாம் என அரசன் எண்ணிக் கொண்டிருந்தான்.