20
ஆனால் அவருடைய உள்ளம் இறுமாப்புற்று, அவருடைய மனம் செருக்கினால் கடினப்பட்டது. உடனே அவர் அரசின் அரியணையிலிருந்து தள்ளப்பட்டார்: அவரிடமிருந்து அரசது மேன்மை பறிக்கப்பட்டது.
21
மனித சமுதாயத்தினின்று அவர் விரட்டப்பட்டார். மேலும் அவரது உள்ளம் விலங்குகளின் மனமாக மாற்றப்படவே, அவர் காட்டுக் கழுதைகளோடு வாழ்ந்துவந்தார். மனிதர்களின் அரசுகளை உன்னதரே ஆள்கின்றார் என்றும், தாம் விரும்பியவர்க்கே அவற்றை வழங்குகின்றார் என்றும் உணரும்வரை, அவர் மாடுபோல் புல்லை மேய்ந்தார்: அவரது உடல் வானத்துப் பனியில் நனைந்து கிடந்தது.
22
அவருடைய மகனாகிய பெல்சாட்சர்! இவற்றை எல்லாம் நீர் அறிந்திருந்தும் உன் இதயத்தைத் தாழ்த்திக் கொள்ளவில்லை.