தானியேல் 4:25-27 - WCV
25
மனித சமுதாயத்தினின்று நீர் விரட்டப்படுவீர்: காட்டு விலங்களோடு வாழ்ந்து, மாடுபோல புல்லை மேய்ந்து, வானத்தின் பனியில் நனைந்து கிடப்பீர். இவ்வாறு ஏழு ஆண்டுகள் உம்மைக் கடந்து செல்லும், மனிதர்களின் அரசை உன்னதமானவரே ஆள்கின்றார் என்றும், தாம் விரும்பியவர்க்கே அதனைத் தந்தருள்வார் என்றும் நீர் உணரும் வரை அந்நிலை நீடிக்கும்.
26
வேர்கள் நிறைந்த அடிமரத்தை விட்டுவைக்க வேண்டும் என்று கட்டளை பிறந்தது அல்லவா? அதன்படி, விண்ணகக் கடவுளே உலகை ஆள்கின்றார் என்பதை நீர் உணர்ந்தவுடன், அரசுரிமை மீண்டும் உனக்குக் கிடைக்கும்.
27
எனவே, அரசரே! என் அறிவுரை உம்மால் ஏற்றுக் கொள்ளத்தக்கது ஆக! நல்லறத்தைப் பேணித் தீச்செயல்களை நீக்குக! ஒடுக்கப்பட்டோர்க்கு இரக்கம் காட்டி உம் பாவக்கறைகளைப் போக்கிக்கொள்க! ஒருவேளை உமது வளமை நீடிப்பதற்கு ஒது வழியாகலாம்” என்றார்.