தானியேல் 4:23 - WCV
மேலும், அரசரே! காவலராகிய தூயவர் ஒருவர் வானத்திலிருந்து இறங்கி வந்ததை நீர் கண்டீர் அல்லவா! அவர், 'இந்த மரத்தை வெட்டி அழித்துப்போடுங்கள்: ஆனால் வேர்கள் நிறைந்த அடிமரத்தை அப்படியே நிலத்தில் விட்டுவையுங்கள்: இரும்பாலும் வெண்கலத்தாலுமான சங்கிலியால் அது கட்டப்பட்டு வயல்வெளிப் பசும்புல் நடுவில் கிடக்கட்டும்: வானத்தின் பனியால் அவன் நனையட்டும். ஏழு ஆண்டுகள் அவனைக் கடந்து செல்லும்வரை அவன் விலங்கோடு விலங்காய்த் திரிவான் என்று சொன்னதையும் கேட்டீர்.