இதைக் கேட்டவுடன் பெல்தசாச்சார் என்னும் பெயர்கொண்ட தானியேல் ஒரு கணம் திகைத்து நின்றார்: அவருடைய எண்ணங்கள் அவரைக் கலக்கமுறச் செய்தன. அதைக் கண்ட அரசன், “பெல்தசாச்சார், கனவோ அதன் உட்பொருளோ உம்மைக் கலக்கமுறச் செய்யவேண்டாம்” என்றான். பெல்தசாச்சார் மறுமொழியாக, “என் தலைவரே! இந்தக் கனவு உம் பகைவர்களுக்கும் இதன் உட்பொருள் உம் எதிரிகளுக்குமே பலிப்பதாக!