10
நான் படுக்கையில் கிடந்த போது, என் மனக்கண் முன்னே தோன்றிய காட்சிகளாவன: “இதோ! நிலவுலகின் நடுவில் மரம் ஒன்றைக் கண்டேன்: அது மிக உயர்ந்து நின்றது.
11
அது வளர்ந்து வலிமை மிக்கதாய், வானத்தைத் தொடுமளவுக்கு உயர்ந்து காணப்பட்டது. நிலவுலகின் எல்லைகளிலிருந்துகூட அதைப் பார்க்கலாம்.
12
அதன் இலைகள் மிகவும் அழகாய் இருந்தன: மரத்தில் கனிகள் மிகுதியாய் இருந்தன: அதில் எல்லா உயிர்களுக்கும் போதிய உணவு இருந்தது: அதன் நிழலில் காட்டு விலங்குகள் தங்கியிருந்தன: அதன் கிளைகளில் வானத்துப் பறவைகள் குடியிருந்தன: அனைத்து உயிர்களுக்கும் அதிலிருந்து உணவு கிடைத்தது.