தானியேல் 11:24 - WCV
செல்வச் சிறப்புமிக்க நகரங்களுள் அவன் முன்னெச்சரிக்கை இன்றி நுழைந்து, தன் தந்தையரும் முன்னோரும் செய்யாததை எல்லாம் செய்வான்: அந்நகரங்களில் கொள்ளையடித்த பொருள்களையும் கைப்பற்றிய செல்வங்களையும் வாரியிறைப்பான்: அந்நகரங்களின் அரண்களைப் பிடிக்கப் பல்வேறு வழிமுறைகளைக் கையாள்வான்: ஆயினும் இந்த நிலை சிறிது காலமே நீடிக்கும்.