தானியேல் 10:6-8 - WCV
6
அவரது உடல் பளிங்கு போல் இருந்தது: அவர் முகம் ஒளிவிடும் மின்னலைப்போல் இருந்தது: அவருடைய கண்கள் பொறி பறக்கும் தீப்பந்தங்கள் போலும், கைகளும் கால்களும் மினுமினுக்கும் வெண்கலம் போலும், அவரது பேச்சொலி மக்கள் கூடத்தின் ஆரவாரம் போலும் இருந்தன.
7
தானியேல் ஆகிய நான் மட்டுமே இந்தக் காட்சியைக் கண்டேன். என்னுடன் இருந்தவர்கள் அதைப் பார்க்கவில்லை: ஆனால் அவர்கள் மிகுந்த நடுக்கமுற்று ஒளிந்துகொள்ள ஓடிவிட்டார்கள்.
8
தனித்து விடப்பட்ட நான் மட்டுமே இப்பெரும் காட்சியைக் கண்டேன். நான் வலுவிழந்து போனேன்: என் முகத்தோற்றம் சாவுக்கு உள்ளானவனைப்போல் வெளிறியது. என்னிடம் ஆற்றலே இல்லாது போயிற்று.