தானியேல் 10:16-19 - WCV
16
அப்போது, மானிட மகனின் தோற்றம் கொண்ட ஒருவர் என் உதடுகளைத் தொட்டார். நானும் வாய் திறந்து பேசி, எனக்கு எதிரில் நின்றவரை நோக்க, “என் தலைவரே! இந்தக் காட்சியின் காரணமாய் நான் வேதனையுற்றேன். என்னிடம் ஆற்றலே இல்லாது போயிற்று.
17
என் தலைவருடைய ஊழியனாகிய நான் என் தலைவராகிய உம்மோடு உரையாடுவது எப்படி? ஏனெனில் நான் வலிமை இழந்துவிட்டேன்: என் மூச்சும் அடைத்துக் கொண்டது” என்றேன்.
18
அப்பொழுது, மனிதச் சாயல் கொண்ட அவர் மறுபடியும் என்னைத் தொட்டு வலுவூட்டினார்.
19
மேலும் அவர், “மிகுந்த அன்புக்குரியவனே! அஞ்சாதே: உனக்குச் சமாதானம் உண்டாவதாக! திடங்கொண்டு துணிவாயிரு” என்றார். இவ்வாறு அவர் பேசியபோது, எனக்குத் துணிவு உண்டாகி, “என் தலைவர் பேசட்டும்: ஏனெனில், நீர் எனக்கு வலுவூட்டினீர்” என்றேன்.