19
அரசன் அவர்களோடு உரையாடலானான்: அப்பொழுது அவர்கள் அனைவருள்ளும் தானியேல், அனனியா, மிசாவேல், அசரியா ஆகியோருக்கு இணையாக யாரும் காணப்படவில்லை: எனவே அவர்கள் அரசன் முன்னிலையில் பணிபுரியலாயினர்.
20
ஞானம், விவேகம் சார்ந்தவற்றில் அரசன் அவர்களோடு கலந்துரையாடினான். அப்பொழுது அவனது அரசில் இருந்த எல்லா மந்திரவாதிகளையும் மாயவித்தைக்காரர்களையும் விட அவர்கள் பத்து மடங்கு சிறந்தவர்களாய் இருந்ததைக் கண்டறிந்தான்.
21
இவ்வாறு சைரசு என்ற அரசனது முதலாம் ஆட்சியாண்டுவரை தானியேல் தொடர்ந்து பணிபுரிந்தார்.