அலுவலர் தலைவன் தானியேலை நோக்கி, “உங்களுக்கு உணவும் பானமும் ஏற்பாடு செய்திருக்கும் அரசனாகிய என் தலைவருக்கு நான் அஞ்சிகிறேன். ஏனெனில் உங்களையொத்த வயதினரை விட நீங்கள் களை குன்றியிருப்பதை அரசன் கண்டால் என் தலையே போய்விடும்: நீங்கள்தான் அதற்குக் காரணமாவீர்கள்” என்றான்.