4
அங்கே சமவெளியில் நான் கண்ட காட்சியைப் போன்று இஸ்ரயேலின் கடவுளது மாட்சி இலங்கியது.
5
அவர் என்னை நோக்கி, “மானிடா! உன் கண்களை உயர்த்தி வடக்கே பார்” என்றார். நானும் வடதிசைநோக்கி என் கண்களை உயர்த்தினேன். அங்கே வடக்கில் பலிபீடத்தின் முற்றத்தில் நுழைவாயிலின் அருகே ஆண்டவரது சகிப்பின்மையைத் தூண்டும் சிலை இருந்தது.
6
அவர் என்னை நோக்கி, “மானிடா! அவர்கள் செய்வதைப் பார்த்தாயா? என் திருத்தலத்திலிருந்து நான் விலகியிருக்குமாறு இஸ்ரயேல் வீட்டார் செய்கிற மிகவும் அருவருக்கத்தக்கவற்றைப் பார்க்கின்றாய் அல்லவா? திரும்பி வா, இதை விடவும் அருவருக்கத்தக்கவற்றைக் காண்பாய்” என்றார்.