8
ஆயினும், நீங்கள் நாடுகளுக்குள்ளே சிதறடிக்கப்படும்போது, வாளுக்குத் தப்பும் சிலரை எஞ்சியோராக நான் வேற்றினங்களிடையே விட்டுவைப்பேன்.
9
இவ்வாறு, வேற்றினங்களிடையே சிறைப்படுத்தப்பட்டு உயிர் தப்புவோர் என்னை நினைவு கூர்வர். ஏனெனில் என்னை விட்டு விலகி விபசாரம் செய்த தங்கள் இதயத்தையும், சிலைகள் மீது காமுற்ற தங்கள் கண்களையும் குறித்து தங்களையே நொந்து கொள்ளச் செய்வேன். அவர்கள் தங்கள் அருவருப்பான எல்லாச் செயல்களுக்காகவும், எல்லாக் கேடுகளுக்காகவும் தங்களைத் தாங்களே வெறுப்பர்.
10
அப்போது, நானே ஆண்டவர் என்றும் 'இக்கேட்டை அவர்களுக்கு வருவிப்பேன்' என நான் பொய்யாகச் சொல்லவில்லை என்றும் அவர்கள் அறிவார்கள்.”
11
தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: நீ கையடித்துக் காலை உதறிச் சொல்: ஐயோ கேடு! இஸ்ரயேல் வீட்டாரின் எல்லாத் தீய அருவருப்புகளுக்காகவும் அவர்கள் வாளாலும் வறட்சியாலும் கொள்ளை நோயாலும் மடிவர்.