எசேக்கியேல் 39:27-29 - WCV
27
நான் அவர்களை வேற்றினத்தாரிடமிருந்தும் பகை நாடுகளிலிருந்தும் கூட்டிச் சேர்க்கையில், நான் தூயவர் என அவர்கள் வழியாய்ப் பல மக்களினங்கள் முன்னால் வெளிப்படுத்துவேன்.
28
அப்போது ஆண்டவராகிய நானே அவர்களின் கடவுள் என்று அவர்கள் அறிந்து கொள்வர். ஏனெனில் நான் அவர்களை வேற்றித்தாரிடையே சிறையிருப்புக்கு அனுப்பினாலும் அவர்களது நாட்டிற்குள் கூட்டிச் சேர்ப்பேன். அவர்களில் யாரையும் அங்கே விட்டுவிட மாட்டேன்.
29
நான் இனி ஒருபோதும் என் முகத்தை அவர்களிடமிருந்து மறைத்துக்கொள்ளமாட்டேன். இஸ்ரயேல் வீட்டார் மீது என் ஆவியைப் பொழிவேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.