எசேக்கியேல் 39:17-20 - WCV
17
மானிடா! தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: எல்லாப் பறவைகளையும் எல்லாக் காட்டுவிலங்குகளையும் அழைத்துச் சொல்: வாருங்கள்! எப்பக்கமுமிருந்து நான் தயாரிக்கும் என் பலிக்கு ஒன்று திரண்டு வாருங்கள். உங்களுக்கென இஸ்ரயேல் மலையில் நடைபெறும் பெரிய பலி அது. நீங்கள் அங்கே இறைச்சி உண்டு, இரத்தம் குடிக்கலாம்.
18
வலிமைமிகு மனிதரின் சதையை உண்பீர்கள். நாட்டின் தலைவர்களின் இரத்தத்தைக் குடிப்பீர்கள். அவற்றை, ஆட்டுக்கிடாய்கள், செம்மறிகள், வெள்ளாட்டுக் கிடாய்கள், பாசானின் கொழுத்த காளைகள் ஆகியவற்றை உண்பது போல உண்பீர்கள்.
19
நான் உங்களுக்கெனத் தயாரிக்கும் பலியில் நீங்கள் தெவிட்டுமளவுக்குக் கொழுப்பை உண்டு, வெறியுண்டாகுமளவுக்கு இரத்தத்தைக் குடிப்பீர்கள்.
20
என் மேசையில் நீங்கள் குதிரைகளையும் குதிரை வீரர்களையும் வலிமைமிகு மனிதர்களையும் எல்லாப் போர் வீரர்களையும் வயிறார உண்பீர்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.