1
மானிடா! இஸ்ரயேல் மலைகளுக்கு இறைவாக்குரைத்துச் சொல்: இஸ்ரயேல் மலைகளே! ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்.
2
தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: உங்களைக் குறித்து உங்கள் பகைவன், “ஆகா! பழங்கால உயர்விடங்கள் நமக்கு உரிமையிடங்கள் ஆயின” என்றான்.
3
எனவே இறைவாக்காகச் சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: உண்மையில் நீங்கள் எம்மருங்கும் பாழாக்கப்பட்டு, மிதிக்கப்பட்டு, எஞ்சிய மக்களினங்களுக்கு உரிமையிடமாகி, வாய்க் கொழுப்புள்ளோரின் ஏளனப் பேச்சுக்கும் மக்களின் அவதூறுக்கும் உள்ளானீர்கள்.
4
எனவே, இஸ்ரயேல் மலைகளே! தலைவராகிய ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள். மலைகளுக்கும் குன்றுகளுக்கும் ஓடைகளுக்கும், பள்ளத்தாக்குகளுக்கும் அழிவின் பாழிடங்களுக்கும், சுற்றிலுமுள்ள மற்ற நாடுகள் கொள்ளையிட்டு ஏளனம் செய்யும், குடிகளற்ற நகர்களுக்கும், தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: