எசேக்கியேல் 33:27 - WCV
அவர்களுக்கு இதைச் சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் மேல் ஆணை! பாழிடம்வாழ் எஞ்சியோர் வாளால் வீழ்வர். வயல் வெளியில் இருப்போரைக் காட்டு விலங்குகளுக்கு இரையாய் அளிப்பேன். கோட்டையிலும் குகையிலும் தங்கியிருப்போர் கொள்ளை நோயால் மடிவர்.