எசேக்கியேல் 30:4-6 - WCV
4
எகிப்திற்கு எதிராய் ஒருவாள் வரும்: கூசு பகுதியில் திகைப்பு மேலோங்கும்: எகிப்தில் கொல்லப்பட்டோர் வீழ்கையில் அதன் செல்வங்கள் வாரிக்கொண்டு செல்லப்படும்: அதன் அடித்தளங்கள் அழிந்துபோகும்.
5
எகிப்துடன் கூசு, பூத்து, லூது, அனைத்து அரேபியா, லிபியா மற்றும் நான் உடன்படிக்கை செய்து கொண்ட நாட்டின் மக்கள் யாவரும் வாளால் வீழ்வர்.
6
ஆண்டவர் கூறுவது இதுவே: எகிப்தின் கூட்டு நாடுகள் வீழும்: அதன் பெருமைக்குரிய வலிமை தோல்வியுறும்: மிக்தோல் முதல் சீனிம் வரையிலுள்ள பகுதிக்குள் எல்லாரும் வாளால் வீழ்வர், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.