எசேக்கியேல் 30:16-18 - WCV
16
எகிப்துக்கு நெருப்பிடுவேன்: சீன் நகரம் துன்பத்தால் புலம்பும்: புயலினால் நோ அலைக்கழிக்கப்படும்: தீராத நெருக்கடியில் நோபு தவிக்கும்.
17
ஆவேன் மற்றும் பீபசேத்து நகர இளைஞர் வாளால் வீழ்வர்: அந்நகர்கள் அடிமைத்தனத்தில் உழலும்.
18
எகிப்தின் கொழுவை நான் முறிக்கையில், தெகபனகேசு நகரின் பகல் இரவாகும்: இறுமாப்புக்குரிய அதன் வலிமை அங்கே முடிவுக்குக் கொண்டு வரப்படும்: மேகங்களால் அது மூடப்படும்: சிறையிருப்புக்கு அதன் சிற்றூர்கள் செல்லும்.