தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: சீதோனே, நான் உனக்கு எதிராய் இருக்கிறேன்: உன் நடுவில் என் மாட்சியை வெளிப்படுத்தும்போது, நான் உன்மீது தண்டனைத் தீர்ப்புகளை நிறைவேற்றும்போது, உன் நடுவில் என் தூய்மையைக் காண்பிக்கும்போது, “நானே ஆண்டவர்” என உன்னிலுள்ளோர் அறிந்து கொள்வர்.